ரயில்வேயில் 1,265 ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்கள்.. சென்னையில் 119 காலியிடங்கள்!

இந்திய ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு நாடு முழுவதும் 1,265 காலிப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 119 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசு வேலை தேடும் பட்டதாரிகளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 20 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், ரயில்வே நிர்ணயித்த A2 மருத்துவத் தகுதியை பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக கண் பார்வை தொடர்பான மருத்துவத் தகுதி விதிகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
தேர்வு முறையின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணியில் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.70,000-க்கும் அதிகமாக சம்பளம் மற்றும் இதர சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbapply.gov.in மூலம் நவம்பர் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.




கருத்துகள் (0)