வடகிழக்குப் பருவமழை: மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்!

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் காய்ச்சி வடிகட்டிய குடிநீரைக் குடிக்க வேண்டும் என்றும், டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழைக்கோட் மற்றும் குடைகளைப் பயன்படுத்துவது குறித்தும் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் மரங்களின் கீழ் ஒதுங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய வழிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பருவமழைக் காலத்தில் நோய்கள் மற்றும் விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்களும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.




கருத்துகள் (0)