வெள்ளி, அக்டோபர் 16, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தீபாவளிக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச மளிகைத் தொகுப்பா? முதல்வர் விஜய் ஆலோசனை!

தீபாவளிக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச மளிகைத் தொகுப்பா? முதல்வர் விஜய் ஆலோசனை!

 

 

தமிழகத்தில் விலைவாசி உயர்வு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச மளிகைப் பொருட்கள் வழங்குவது குறித்து முதலமைச்சர் விஜய், நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, எண்ணெய், பருப்பு, மைதா உள்ளிட்ட பலகாரங்கள் தயாரிக்கத் தேவையான பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

 

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் மொத்த செலவினங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தீபாவளிக்கு இலவச மளிகைத் தொகுப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரேஷன் அட்டைதாரர்களிடையே எழுந்துள்ளது. இருப்பினும், திட்டம் தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இதை உறுதியான முடிவாகக் கருத முடியாது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.