10, 11, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அசல் மதிப்பெண் சான்றிதழ் தயார்!

தமிழகம் முழுவதும் கடந்த ஜூன், ஜூலை 2026 மாதங்களில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு, 11ஆம் வகுப்பு அரியர் தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் தயாராகியுள்ளன. இதையடுத்து, இன்று அக்.13 முதல் மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவுறுத்தல்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. சான்றிதழைப் பெறச் செல்லும் மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட் அல்லது தற்காலிக மதிப்பெண் பட்டியலை எடுத்துச் செல்ல வேண்டும். எனவே, துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் தங்களது தேர்வு மையத்தை அணுகி அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.




கருத்துகள் (0)