செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மணிமுத்தாறு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு! சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

மணிமுத்தாறு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு! சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

 

 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவியில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

இதன்படி, மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அருவிக்கு வரும் பொதுமக்கள் அதன் இயற்கை அழகைக் கண்டு ரசிக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி வனத்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.