137 கிலோ மெத்தம்பெட்டமைன் கடத்தல் வழக்கு: தலைமறைவான ராஜ்குமாருக்கு சம்மன்!

137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக முன்னாள் நிர்வாகி பூபாலனின் கூட்டாளி எனக் கூறப்படும் ராஜ்குமாருக்கு மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) சம்மன் அனுப்பியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் ராஜ்குமாரை கண்டுபிடித்து, அவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கடத்தல் சம்பவத்தில் அவருக்கு உள்ள தொடர்பு என்ன, போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற உள்ளது.




கருத்துகள் (0)