ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
அரசியல்

முகமது ஷமி பாஜகவில் இணைய உள்ளாரா? நிதின் நபினுடன் சந்திப்பு!

முகமது ஷமி பாஜகவில் இணைய உள்ளாரா? நிதின் நபினுடன் சந்திப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பாஜகவில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன. டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை ஷமி நேரில் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் கன்வர் பாசித் அலியும் உடன் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முகமது ஷமியின் இந்த சந்திப்பு, அவர் அரசியலில் நுழையப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஷமி பாஜகவில் இணைவது குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன.

 

இருப்பினும், முகமது ஷமி பாஜகவில் சேரப்போவதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஷமி தரப்போ அல்லது பாஜக தலைமையோ இந்த தகவலை உறுதிப்படுத்தாத நிலையில், அவரது அரசியல் வருகை குறித்த செய்திகள் தற்போது ஊகங்களாகவே உள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.