ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

ரேஷன் கடைகளில் பருப்பு தட்டுப்பாட்டைத் தவிர்க்க 60,000 டன் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டம்!

ரேஷன் கடைகளில் பருப்பு தட்டுப்பாட்டைத் தவிர்க்க 60,000 டன் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டம்!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பருப்பு விநியோகம் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய அரசு புதிய கொள்முதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC), 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு மற்றும் மசூர் பருப்பு வாங்குவதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது.

 

இந்த கொள்முதல், 2027-ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ரேஷன் கடைகளுக்கு தேவையான பருப்பு இருப்பை முன்கூட்டியே தயார் செய்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அடுத்தடுத்த மாதங்களில் பருப்பு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

ரிவர்ஸ் ஏல நடைமுறையில் பருப்பு கொள்முதல் செய்யப்பட உள்ள நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதும், பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தரமான பருப்பு கிடைப்பதை உறுதி செய்வதும் அரசின் நோக்கமாக உள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.