“15 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு வருவது வெறும் கற்பனை” – எடப்பாடி பழனிசாமி பதிலடி!

அதிமுகவில் இருந்து ஏற்கெனவே 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மேலும் 15 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு வரவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு பதிலளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இது வெறும் கற்பனை என்று விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், இதேபோல் தானும் தவெகவில் இருந்து 20 எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவுக்கு வருவார்கள் என்று கூறிவிட முடியும் எனத் தெரிவித்துள்ளார். தவெக தரப்பில் தொடர்ந்து வெளியாகும் இத்தகைய கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு அமைந்துள்ளது.




கருத்துகள் (0)