“யூனிட்டுக்கு ரூ.35 கொடுத்து மின்சாரம் வாங்குவது பகல் கொள்ளை” – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, ஒரு யூனிட்டுக்கு ரூ.35 கொடுத்து மின்சாரம் வாங்குவது பகல் கொள்ளை என உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். காற்றும் மழையும் இல்லை என்று கூறி செயற்கையான மின்தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் ஊழல் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவே முதலமைச்சர் வெளிமாநிலத்திற்குச் சென்றுள்ளாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், விலைவாசி உயர்வில் மாநிலத்தை முதலிடத்திற்குக் கொண்டு சென்றுவிட்டதாக அரசைக் குற்றம்சாட்டிய அவர், மாற்றம் ஏற்படுத்துவதாகக் கூறிய ஆட்சியாளர் தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மக்களே உரிய பாடம் புகட்டுவார்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




கருத்துகள் (0)