அம்பாசமுத்திரத்தில் தவெக – நாதக இடையே நேரடிப் போட்டி! சீமான் பேட்டி!

ராமநாதபுரத்தில் இன்று (அக்.30) தேவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த சீமான், தனது குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் பெருந்தன்மையுடன் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடாமல் விட்டுக்கொடுத்தால் அதை வரவேற்பதாகக் கூறினார். அம்பாசமுத்திரத்தில் தவெக மற்றும் நாதக இடையே போட்டி நிலவும் என்றும் அவர் தெரிவித்தார்.




கருத்துகள் (0)