விசாரணைக்காக வேப்பேரி காவல் நிலையத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் சேகர்பாபு!

திமுக முன்னாள் அமைச்சரான சேகர்பாபு இன்று (அக்.30) சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் ஆஜரானார். காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர் மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அதன்படி அவர் காவல் நிலையத்திற்குச் சென்றார்.
அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டபோது காவல்துறையினருக்கும் சேகர்பாபுவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.




கருத்துகள் (0)