வியாழன், நவம்பர் 05, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

அனைத்து ரயில்களிலும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகள் வேண்டும்! மத்திய அமைச்சருக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம்!

அனைத்து ரயில்களிலும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகள் வேண்டும்! மத்திய அமைச்சருக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம்!

மெட்ரோ ரயில்களில் பயணிகளின் வசதிக்காக அடுத்தடுத்த ரயில் நிலையங்கள் குறித்த விவரங்கள் டிஜிட்டல் திரைகள் மூலம் அறிவிக்கப்படுகின்றன. இதேபோன்ற நவீன தகவல் அறிவிப்பு வசதியை நாடு முழுவதும் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், ரயில் புறப்படும் இடம், செல்லும் வழித்தடத்தில் வரவுள்ள அடுத்தடுத்த நிறுத்தங்கள், ரயில் தாமதம் உள்ளிட்ட முக்கியமான தகவல்களைப் பயணிகள் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகளை நிறுவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, நிகழ்நேரத் தகவல்களை வழங்கும் இந்த வசதி பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதுடன், ரயில் பயணத்தை மேலும் எளிதாக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தக் கோரிக்கையை விரைவாகப் பரிசீலித்து நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.