ஆந்திர உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி; சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

ஆந்திரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் 12 மாநகராட்சிகள், 81 நகராட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றி தெலுங்கு தேசம், ஜன சேனா மற்றும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோரின் அரசியல் வெற்றியையும் அவர் பாராட்டியுள்ளார். இதற்கிடையே, வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டு நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.




கருத்துகள் (0)