வியாழன், நவம்பர் 05, 2026
உண்மையின் குரல்
அரசியல்

தவெக ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ-க்களுக்கு வலை? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தவெக ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ-க்களுக்கு வலை? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

சட்டமன்றத்தில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆறு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியைச் சீர்குலைக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள், தவெக எம்.எல்.ஏ-க்களை பணம் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக தவெக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்ற விவாதமும் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. இருப்பினும், விரைவில் நடைபெறவுள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே எதிர்க்கட்சிகள் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.