வெள்ளி, நவம்பர் 06, 2026
உண்மையின் குரல்
அரசியல்

தவெக அரசுக்கு எதிரான குதிரை பேர புகார்.. அதிமுக முன்னாள் துணை மேயர் மன்னனிடம் போலீசார் விசாரணை!

தவெக அரசுக்கு எதிரான குதிரை பேர புகார்.. அதிமுக முன்னாள் துணை மேயர் மன்னனிடம் போலீசார் விசாரணை!

தமிழகத்தில் தவெக அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, அரசுக்கு எதிராக வாக்களிக்க சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பிரமுகரும், மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயருமான மன்னனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

குறிப்பாக, மதுரை மத்திய தொகுதியைச் சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவிடம் மன்னன் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மன்னன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.