அப்பா.. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் ஈடாகாத ஒரே உறவு!

தன் ஆசைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, பிள்ளைகளின் கனவுகளுக்கு சிறகுகள் கொடுப்பவர் அப்பா!
தனக்குப் பிடித்ததை வாங்கிக் கொள்ளாமல், பிள்ளைகளுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுத்து அழகு பார்ப்பவர் அப்பா!
வலிகள் வந்தாலும் வெளியில் காட்டாமல், குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக ஓயாமல் உழைக்கும் இதயம் அப்பா!
நாம் தோல்வியடைந்தாலும் தட்டிக் கொடுத்து, மீண்டும் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை கொடுக்கும் முதல் மனிதர் அப்பா!
அவருடைய விரல்கள் பிடித்துத்தான் நாம் நடக்கக் கற்றுக்கொண்டோம். அவருடைய உழைப்பில்தான் நம் வாழ்க்கையை அழகாக அமைத்துக்கொண்டோம்.
அப்பாவின் அன்பு எப்போதும் வார்த்தைகளில் வெளிப்படாது; ஆனால் அவர் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஆயிரம் அன்பு மறைந்திருக்கும்.
உலகமே நம்மைக் கைவிட்டாலும், கடைசி வரை நமக்காக நிற்கும் அந்த ஒரு உறவு… அப்பா!


கருத்துகள் (0)