20 அடி பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்த மினி லாரி; 5 பேர் படுகாயம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில், விருத்தாசலம் சாலை மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்த மினி லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் சாலையோரத்தில் இருந்த சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் மினி லாரி தலைகுப்புறக் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியில் பயணித்த 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்தவர்கள் மற்றும் மீட்புப் பணியினர் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)