செவ்வாய், நவம்பர் 03, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கடன் தொல்லையால் இரு குழந்தைகளைக் கொன்ற தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கடன் தொல்லையால் இரு குழந்தைகளைக் கொன்ற தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணியைச் சேர்ந்தவர் தேவிகுமார் (43). இவர் கடந்த 2020-ம் ஆண்டு கடன் தொல்லை காரணமாகத் தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம், கடந்த நவம்பர் 2-ம் தேதி தீர்ப்பளித்தார். அதில் தேவிகுமார் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.