ஞாயிறு, அக்டோபர் 11, 2026
உண்மையின் குரல்
அரசியல்

அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் பங்கேற்றதற்கு நிர்மல்குமார் எதிர்ப்பு!

அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் பங்கேற்றதற்கு நிர்மல்குமார் எதிர்ப்பு!

 

 

பிரதமர் மோடி பங்கேற்ற அரசு விழாவில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டதற்கு அமைச்சர் நிர்மல்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு நிகழ்ச்சிகளை அரசியல் கட்சியினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், இதுபோன்ற நிகழ்வுகளில் கட்சி சார்ந்தவர்கள் இடம்பெறுவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும், திருப்பரங்குன்றத்தில் மக்கள் அமைதியாக இருந்து வரும் நிலையில், பாஜகவினர் தலையிட்டதால்தான் அங்கு தேவையற்ற பிரச்சினைகள் உருவாகின்றன என்றும் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அரசு விழாக்களில் அரசியல் கட்சியினரின் பங்கேற்பு மற்றும் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ள இந்தக் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.