“நேர்மையாக நின்றதால்தான் அமைச்சரவையில் இடம்” – திருமாவளவன் பேச்சு!

சூழ்ச்சிகளையும் வஞ்சகத்தையும் எதிர்த்து நேர்மையான பாதையில் செயல்பட்டதால்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சதி மற்றும் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவோருக்கு மத்தியில் விசிக தொடர்ந்து அரசியல் களத்தில் போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுக கூட்டணியில் இருந்த காலகட்டத்தில் சாதியவாத சக்திகள் தங்களை விமர்சித்ததாகக் கூறிய திருமாவளவன், விசிக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பு காலத்தின் கணக்கீட்டால் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)