நீலகிரியில் தேயிலை வரத்து சரிவு: விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

நீலகிரி மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. தேயிலைக் கொழுந்துகள் கருகியதால் தினசரி பசுந்தேயிலை வரத்து 4,000 கிலோவிலிருந்து 600 கிலோவாகக் குறைந்து, உற்பத்தி 80% சரிந்துள்ளது. தொழிற்சாலைகள் இயங்குவது குறைந்து, 1,000-க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




கருத்துகள் (0)