தூத்துக்குடியில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்.. 3 இளைஞர்கள் கைது, ஆயுதங்களும் சிக்கின!

தூத்துக்குடி ரோச்பார்க் பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து செல்வம், மூர்த்தி மற்றும் வினோத் ஆகிய 3 பேரையும் தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா, 3 அரிவாள்கள் மற்றும் கஞ்சா செடிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கஞ்சா விற்பனை தொடர்பாக மேலும் தகவல்கள் கிடைக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.




கருத்துகள் (0)