சனி, அக்டோபர் 17, 2026
உண்மையின் குரல்
அரசியல்

அதிமுக 55-வது ஆண்டு தொடக்க விழா: கொடியேற்றி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

அதிமுக 55-வது ஆண்டு தொடக்க விழா: கொடியேற்றி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

 

 

அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார். தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கி விழா வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேவேளையில், முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பங்கேற்காததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.