சனி, அக்டோபர் 17, 2026
உண்மையின் குரல்
அரசியல்

SIR நடைமுறைக்கு தொடக்கம் முதலே திமுக எதிர்ப்பு: ஆ.ராசா திட்டவட்டம்!

SIR நடைமுறைக்கு தொடக்கம் முதலே திமுக எதிர்ப்பு: ஆ.ராசா திட்டவட்டம்!

 

 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR நடைமுறையைத் தொடக்கம் முதலே நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் திமுக தொடர்ந்து எதிர்த்து வருவதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். சில கட்சிகள் நடத்திய போராட்டங்களில் திமுக பங்கேற்காததால், அந்தக் கட்சி SIR நடைமுறையை ஆதரிப்பது போன்ற தவறான தோற்றம் உருவாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், SIR விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பிய ஆ.ராசா, இந்த நடைமுறைக்கு எதிராகத் திமுக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். தேர்தல் தொடர்பான இந்த விவகாரத்தில் பல்வேறு கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், ஆ.ராசாவின் இந்தக் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.