அதிமுக 55-வது ஆண்டு தொடக்க விழா.. பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு!

அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்டோபர் 17, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். மேலும், கட்சித் தலைமையிடம் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரின் பெயர்களும் இந்தப் பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.




கருத்துகள் (0)