ஞாயிறு, அக்டோபர் 18, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையால் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு – மதுரை மல்லிகை கிலோ ரூ.1,800!

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையால் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு – மதுரை மல்லிகை கிலோ ரூ.1,800!

 

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்துள்ளதுடன், பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரித்துள்ளதும் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

மதுரை மாட்டுத்தாவணி சந்தைக்கு இன்று காலை விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட மல்லிகைப் பூ கிலோ ரூ.1,800 வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் நேரம் செல்லச் செல்ல அதன் விலை குறைந்து கிலோ ரூ.1,500-க்கு விற்பனையானது.

மற்ற பூக்களின் விலையும் அதிகமாகக் காணப்பட்டது. பிச்சி கிலோ ரூ.1,000-க்கும், முல்லை ரூ.900-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், கனகாம்பரம் கிலோ ரூ.1,800 வரை விற்பனையானது.

பண்டிகைக்காக வீடுகளில் பூஜைகள் செய்யவும், பூக்களால் அலங்கரிக்கவும் பொதுமக்கள் அதிக அளவில் பூக்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளதால், பூ வாங்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.