வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
அரசியல்

தமிழக அரசைக் கண்டித்து டிசம்பர் 2-ம் தேதி மாநிலம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் எடப்பாடி அறிவிப்பு!

தமிழக அரசைக் கண்டித்து டிசம்பர் 2-ம் தேதி மாநிலம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் எடப்பாடி அறிவிப்பு!

தமிழகத்தில் ஆளும் தவெக அரசைக் கண்டித்து வரும் டிசம்பர் 2ஆம் தேதி மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அரசின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

 

பெண்களின் பாதுகாப்பு, தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்ட விவகாரங்களில் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது. மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மௌனம் காப்பதாகவும் அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

 

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கிடையில், திருச்சியில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நேரடியாக கலந்துகொண்டு தனது எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

டிசம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த மாநிலம் தழுவிய போராட்டம் தமிழக அரசுக்கு எதிராக அதிமுக மேற்கொள்ளும் முக்கிய அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.