செயற்கைக் கையுடன் வயலின் வாசித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஜப்பான் பெண்!

ஜப்பானைச் சேர்ந்த மனாமி இடோ (42), சிறுவயது முதலே வயலின் இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். இசையைத் தனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாகக் கருதி வந்த அவருக்கு, 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்து பெரும் சவாலாக அமைந்தது. அந்த விபத்தில் தனது வலது கையை அவர் இழந்தார்.
இருப்பினும், அந்த இழப்பு அவரது இசைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. தாயின் தொடர் ஊக்கமும் ஆதரவும் அவருக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. இதனால், செயற்கைக் கையின் உதவியுடன் மீண்டும் வயலின் வாசிக்கப் பயிற்சி மேற்கொண்டு தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக, 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் வயலின் வாசித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரது சாதனையை அங்கீகரிக்கும் வகையில், 'முழுமையான செயற்கைக் கையுடன் வயலின் வாசித்த முதல் கலைஞர்' என்ற பெருமை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 2027ஆம் ஆண்டிற்கான கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் மனாமி இடோவின் பெயர் இடம்பெற்றுள்ளது. உடல் ரீதியான சவால்களைத் தாண்டி தனது இசை ஆர்வத்தைத் தொடர்ந்து சாதனையாக மாற்றிய அவரது பயணம் பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.




கருத்துகள் (0)