சனி, அக்டோபர் 17, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி: தாயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தத் திட்டமா?

செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி: தாயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தத் திட்டமா?

 

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி மாயமான 7 வயது சிறுமியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பாக, ஆறாவது நாளாகத் தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் ஜோதிடம் பார்க்கும் சாமியார் ஒருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த நிலையில், சிறுமியின் தாயிடம் நேற்று சுமார் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது குறித்து போலீசார் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், சோதனை நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகாத நிலையில், சிறுமியை மீட்கும் முயற்சியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.