சனி, அக்டோபர் 17, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகத்தில் மழைக்கால நோய்த்தொற்றுகளைத் தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் மழைக்கால நோய்த்தொற்றுகளைத் தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை!

 

 

தமிழகத்தில் மழைக்காலத்தில் நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்கும் வகையில், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் பெருகி நோய்கள் பரவும் அபாயம் இருப்பதால், சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும், பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரே பகுதியில் பலருக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாகச் சுகாதாரத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.