சென்னை மழை பாதிப்பு: “ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்” – டிடிவி தினகரன் விமர்சனம்!

கனமழை எச்சரிக்கை முன்கூட்டியே விடுக்கப்பட்டும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் ஒரே இரவு பெய்த மழைக்கே சென்னை மாநகரம் முழுவதும் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, மாநகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுப்பதைத் தவிர்த்து, பெருமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சியும் தவெக அரசும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மழைநீர் தேங்கும் பகுதிகளில் விரைவான நடவடிக்கை எடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது.




கருத்துகள் (0)