வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10 முதல் அரையாண்டுத் தேர்வு!

10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10 முதல் அரையாண்டுத் தேர்வு!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் அரையாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10-ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கி, டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

 

அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைந்ததும், டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நிறைவடைந்த பின்னர், ஜனவரி 4-ம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.