ஞாயிறு, அக்டோபர் 18, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் இன்று இரவும் கனமழைக்கு வாய்ப்பு! ஹேமச்சந்தர் தகவல்!

சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் இன்று இரவும் கனமழைக்கு வாய்ப்பு! ஹேமச்சந்தர் தகவல்!

 

 

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வடமாவட்டங்களில் இன்று இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். சில இடங்களில் மிகக் கனமழை பெய்வதற்கும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நேற்றைய மழையுடன் ஒப்பிடும்போது அதன் தீவிரம் குறைவாகவே இருக்கும் எனக் கூறியுள்ளார். எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

அதேநேரத்தில், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழையின் தீவிரம் சற்று அதிகமாக இருக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். மழை பெய்யும் நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், வானிலை மற்றும் அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.