திங்கள், அக்டோபர் 19, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

விழுப்புரம் அருகே சிறுமியைத் தூக்கிச் சென்றதாக இளைஞர் மீது புகார்: போலீசார் விசாரணை!

விழுப்புரம் அருகே சிறுமியைத் தூக்கிச் சென்றதாக இளைஞர் மீது புகார்: போலீசார் விசாரணை!

 

 

விழுப்புரம் அருகே உள்ள ஐயூர் அகரம் கிராமத்தில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைத் தூக்கிச் சென்றதாகக் கூறப்படும் வடமாநில இளைஞரைப் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞரைப் பொதுமக்கள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, போலீசார் அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கைது செய்யப்பட்ட இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல்துறை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே விழுப்புரம் பகுதியில் ஒரு சிறுமி மாயமானதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது மற்றொரு சிறுமி தொடர்பாக எழுந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.