ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

சென்னையில் இன்று 16 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்!

சென்னையில் இன்று 16 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்!

சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் விவரங்களைத் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று (நவ.29) நடைபெறுகிறது.

 

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.

 

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், 18 வயது நிறைவடைந்து முதன்முறையாக வாக்காளராக பதிவு செய்ய விரும்புவோர் மற்றும் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களில் மாற்றம் செய்ய வேண்டியவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

 

தகுதியுள்ள பொதுமக்கள் தேவையான ஆவணங்களுடன் தங்களது பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.