ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகத்தில் 6,279 பள்ளிகளில் புத்தகப் பை இல்லாத நாட்கள் கடைப்பிடிப்பு!

தமிழகத்தில் 6,279 பள்ளிகளில் புத்தகப் பை இல்லாத நாட்கள் கடைப்பிடிப்பு!

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மகிழ்ச்சியாக மாற்றும் வகையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ‘மகிழ்வுடன் முன்னேறும் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக மொத்தம் 6,279 பள்ளிகளுக்கு ரூ.1.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

இதன் ஒரு பகுதியாக, நடப்பு கல்வியாண்டில் டிசம்பர் 1, ஜனவரி 12 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய மூன்று நாட்களும் புத்தகப் பை இல்லாத நாட்களாக கடைப்பிடிக்கப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் 3 நாட்களை நடத்த ரூ.3,000 நிதி வழங்கப்பட உள்ளது.

 

இந்த நாட்களில் மாணவர்கள் வழக்கமான பாடப்புத்தகக் கற்றலைத் தாண்டி விளையாட்டு, கலை, இலக்கியம், விநாடி-வினா போட்டிகள், படைப்பாற்றல் பயிற்சிகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கலாம். மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதுடன், கற்றலை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.