வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
உலகம்

பொதுக் கழிப்பறையில் பிறந்த குழந்தை கோப்பைக்குள் விழுந்தது; உயிருடன் மீட்ட பொதுமக்கள்!

பொதுக் கழிப்பறையில் பிறந்த குழந்தை கோப்பைக்குள் விழுந்தது; உயிருடன் மீட்ட பொதுமக்கள்!

வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள ஈட்காவ்ன் உபசிலா பகுதியில் அமைந்துள்ள லாரி நிறுத்துமிடத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தஷ்ஃபியா ஜன்னத் என்ற சிறுமி அங்குள்ள பொதுக் கழிப்பறையில் குழந்தையைப் பெற்றெடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பிறந்த ஆண் குழந்தை கழிப்பறைக் கோப்பைக்குள் விழுந்துள்ளது. எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் பதற்றமடைந்த சிறுமி, குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

சிறிது நேரம் கழித்து கழிப்பறைக்குச் சென்ற ஒருவர், கோப்பைக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்பதைக் கவனித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக மற்றவர்களின் உதவியை நாடியுள்ளார். அங்கு திரண்ட பொதுமக்களுடன் இணைந்து லாரி நிறுத்துமிடத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கடும் முயற்சிக்குப் பிறகு குழந்தையைப் பத்திரமாக மீட்டுள்ளார். அப்போது குழந்தையின் உடலில் ரத்தக் கறைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை உடனடியாக ஈட்கா மாடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது, தனது காதலரான புல் கலாம் என்பவர்தான் குழந்தையின் தந்தை என தஷ்ஃபியா ஜன்னத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

 

பொதுக் கழிப்பறையில் பிறந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடல்நிலை மற்றும் விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளது.

 

https://twitter.com/i/status/2120477662019830258

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.