சின்ன வெங்காயம் கிலோ ரூ.260 ஆக உயர்வு காய்கறி விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் அத்தியாவசிய காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் சந்தையில் வாங்கும் மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.
சில பகுதிகளில் முதல்தர சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.260 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்பு ரூ.100-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது இருமடங்குக்கும் மேலாக விலை உயர்ந்துள்ளது. அதேபோல், பெரிய வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ.40-லிருந்து ரூ.80 ஆக அதிகரித்துள்ளது.
காய்கறிகளின் விலை உயர்வில் முருங்கைக்காயும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்போது ரூ.160 ஆக உயர்ந்துள்ளது. வெண்டைக்காய் விலையும் கிலோ ரூ.30-லிருந்து ரூ.55 ஆக அதிகரித்துள்ளது. அத்தியாவசிய காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், குடும்ப பட்ஜெட்டில் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.




கருத்துகள் (0)