ஹூப்ளி – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை ஜனவரி 25 வரை நீட்டிப்பு!

பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, கர்நாடக மாநிலம் ஹூப்ளி மற்றும் ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஹூப்ளியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு செல்லும் சிறப்பு ரயில் டிசம்பர் 13 முதல் ஜனவரி 24 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து ஹூப்ளி செல்லும் சிறப்பு ரயில் டிசம்பர் 14 முதல் ஜனவரி 25 வரை திங்கட்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது.
இந்த நீட்டிப்பு மூலம் இரு மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்யும் பயணிகளுக்கு கூடுதல் போக்குவரத்து வசதி கிடைக்கும். நீட்டிக்கப்பட்ட காலத்திற்கான சிறப்பு ரயில்களில் முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)