திருமணமான பெண்ணின் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த 35 வயது ஆண்: போலீசார் விசாரணை!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த அருள்பாண்டி (35) என்பவர், ஆர்.கே.பேட்டை அருகே அயன் ஏரி கிராமத்தில் உள்ள திருமணமான இளம்பெண்ணின் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் இருவரும் அறிமுகமாகிப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு இருவரும் நேரில் சந்தித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பழகுவதை நிறுத்துமாறு அந்தப் பெண் கண்டித்ததால், மனவேதனையில் அருள்பாண்டி இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அருள்பாண்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவத்தின் பின்னணி குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)