வெள்ளி, அக்டோபர் 16, 2026
உண்மையின் குரல்
அரசியல்

ERONet மென்பொருள் மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதா? மாணிக்கம் தாகூர் கேள்வி!

ERONet மென்பொருள் மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதா? மாணிக்கம் தாகூர் கேள்வி!

 

 

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் ERONet மென்பொருள் மூலம் தானியங்கி முறையில் படிவம் 7 உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்களைப் பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிட வேண்டும் என்றும், தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன என்பது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.