பெரியார் அறிவுலகத்தில் ‘நான் முதல்வன்’ பெயர் மறைக்கப்பட்டதா? உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கோவையில் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தில், ‘நான் முதல்வன்’ என்ற பெயர் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளதாகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், திமுக அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் அல்லது ஸ்டிக்கர் ஒட்டுவதாக விமர்சிப்பவர்கள், தற்போது பெரியார் அறிவுலகத்தில் ‘நான் முதல்வன்’ என்ற பெயரையே மறைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது பதிவில் தற்போதைய முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துள்ள உதயநிதி ஸ்டாலின், ‘நான் முதல்வன்’ திட்டத்தைச் சிதைத்ததுடன் அதன் பெயரைக்கூட ஏற்க மனமில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். பெரியார் அறிவுலகத்தில் பெயர் மறைக்கப்பட்டதாக எழுந்துள்ள இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)