செவ்வாய், நவம்பர் 24, 2026
உண்மையின் குரல்
இந்தியா

கெட்டுப்போன நூடுல்ஸ் சாப்பிட்ட 130 பேர் பாதிப்பு 118 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

கெட்டுப்போன நூடுல்ஸ் சாப்பிட்ட 130 பேர் பாதிப்பு 118 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கிராமத் திருவிழாவில் விற்பனை செய்யப்பட்ட நூடுல்ஸை சாப்பிட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என மொத்தம் 130 பேர் திடீர் உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். உணவு கெட்டுப்போனதாக கூறப்படும் நிலையில், அதை உட்கொண்டவர்களுக்கு வயிற்று வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

ஹிரி கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட 118 குழந்தைகள் மற்றும் 12 பெரியவர்களுக்கு திடீரென வயிற்று வலி மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 73 குழந்தைகள் முதலுதவி மற்றும் ஆரம்பகட்ட சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை சீரடைந்ததால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் கூடுதல் சிகிச்சை தேவைப்பட்ட 45 குழந்தைகள் மற்றும் 12 பெரியவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். திருவிழாவில் விற்பனை செய்யப்பட்ட உணவால் இத்தனை பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் மாநிலத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.