சனி, நவம்பர் 21, 2026
உண்மையின் குரல்
இந்தியா

இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் வீட்டில் தகராறு.. தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு, தந்தை கைது!

இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் வீட்டில் தகராறு.. தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு, தந்தை கைது!

டெல்லியில் இன்ஸ்டாகிராம் பிரபலமான நேஹாவை ஒருதலைக் காதலித்து வந்ததாகக் கூறப்படும் அபினவ் என்ற இளைஞர், அவரைத் திருமணம் செய்துகொள்ளும் நோக்கில் வீட்டிற்குச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி அவர் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

 

இதனால் ஏற்பட்ட மோதலில் அபினவ் கடுமையாகத் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக நேஹாவின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அபினவ் யார் என்பது தனக்குத் தெரியாது என்றும், அவருடன் எந்தப் பழக்கமும் இல்லை என்றும் நேஹா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.