சனி, நவம்பர் 21, 2026
உண்மையின் குரல்
இந்தியா

நாடு முழுவதும் 32 போலி பல்கலைக்கழகங்கள்.. யுஜிசி வெளியிட்ட பட்டியலில் தமிழக மாணவர்கள் கவனம்!

நாடு முழுவதும் 32 போலி பல்கலைக்கழகங்கள்.. யுஜிசி வெளியிட்ட பட்டியலில் தமிழக மாணவர்கள் கவனம்!

இந்தியாவில் உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் 32 போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ளது. இத்தகைய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதித்துக் கொள்ளாமல் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

யுஜிசி வெளியிட்டுள்ள பட்டியலின்படி, டெல்லியில் அதிகபட்சமாக 12 போலிப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 4, ஆந்திரப் பிரதேசத்தில் 3, புதுச்சேரியில் 2 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 32 கல்வி நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

 

இதில் 18 பல்கலைக்கழகங்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் பல ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் படிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், சேர்க்கைக்கு முன்பாக கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம் மற்றும் சான்றிதழ்களின் செல்லுபடித் தன்மையை சரிபார்ப்பது அவசியம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.