தங்கத்தில் ரீனியம் கலப்படம் செய்யப்படுகிறதா? BIS கடும் எச்சரிக்கை.. மீறினால் சட்ட நடவடிக்கை!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரீனியம் என்ற வேதிப்பொருளை தங்கத்தில் கலப்படம் செய்ய பயன்படுத்துவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த விவகாரம் நகை வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS) இதுகுறித்து கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
தங்கத்தின் தரத்தை பாதிக்கும் வகையில் கலப்படம் செய்வதற்கான பொருட்களை தயாரிப்பது, அவற்றை விற்பனை செய்வது அல்லது இத்தகைய கலப்படப் பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் தூய்மை மற்றும் தரத்தில் முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இந்திய தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை தங்கத்தில் கலப்படம் தொடர்பான தகவல்கள் பரவி வரும் சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)