சனி, நவம்பர் 21, 2026
உண்மையின் குரல்
இந்தியா

நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம்.. கட்டுப்படுத்துவது குறித்து ஒன்றிய அரசிடம் கருத்து கேட்ட உச்ச நீதிமன்றம்!

நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம்.. கட்டுப்படுத்துவது குறித்து ஒன்றிய அரசிடம் கருத்து கேட்ட உச்ச நீதிமன்றம்!

நெருங்கிய ரத்த உறவுகளுக்கு இடையே நடைபெறும் திருமணங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் கேட்டறிந்துள்ளது. இத்தகைய திருமணங்களை தடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் தனது கருத்துகளையும் முன்வைத்துள்ளது.

 

இந்த விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட்டு நேரடியாக இத்தகைய திருமணங்களை தடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் நடைபெறுவதை கட்டுப்படுத்துவது என்பது நீதிமன்றங்களின் அதிகார வரம்பை விட, சட்டம் இயற்றும் அமைப்புகளின் பொறுப்புடன் தொடர்புடையது என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

இதுபோன்ற திருமணங்களை கட்டுப்படுத்த வேண்டுமெனில், அதற்கான சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் சட்டங்களை உருவாக்கி அமல்படுத்தும் அதிகாரம் அரசிடமே உள்ளது என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.