‘இந்தியா’ கூட்டணித் தலைவர்களின் சந்திப்பு கோரிக்கையை நிராகரித்த தலைமை நீதிபதி!

தேர்தல் முறைகேடு புகார்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்தைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். ஆனால், இந்தக் கோரிக்கையை தலைமை நீதிபதி நிராகரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் முறைகேடு தொடர்பான விவகாரங்கள் ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நிர்வாக ரீதியாகச் சந்தித்துப் பேசுவது பொருத்தமாக இருக்காது என அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம், முறையான மனுவைத் தாக்கல் செய்தால், சட்ட நடைமுறைகளின்படி அதைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் தலைமை நீதிபதி பதிலளித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது.




கருத்துகள் (0)