ஜார்க்கண்ட் உருக்கு ஆலையில் விஷவாயு கசிவு: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான இரும்பு உருக்கு ஆலையில் இன்று திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் கசிந்த வாயுவைச் சுவாசித்ததால் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சக ஊழியர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷவாயு கசிவுக்கான காரணம் என்ன, பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரணைக்குப் பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும்.




கருத்துகள் (0)